ஞாயிறு விடுமுறை - ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலாத் தளத்தில் இன்று ( ஏப்.09 ) காலையிலிருந்து ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூரு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கடந்த மூன்று தினங்களாக தொடர் விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஒகேனக்கல்லின் சிறப்பாக மீன் உணவை சுவைக்க ஏராளமானோர் தங்களுக்குத் தேவையான மீன் ரகங்களை கடைகளில் கூறி மீன் உணவை சமைத்து சுவைத்தனர். சுற்றுலாப் பயணிகள் அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி சிறிய அருவி பரிசல் துறை நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க:"காமஷேத்ராவாக மாறிய பெரியார் பல்கலைக்கழகம்" போராட்டத்தில் குறித்த ஊழியர்கள் பகீர் புகார்!