விடுமுறையைக் கழிக்க குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! - watter falls
கோடை விடுமுறை கழிப்பதற்காக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அருவிகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதால் நீண்ட வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர். ஐந்தருவியில் நான்கு கிளைகளிலும், பேரருவியில் ஆண்கள் பகுதியில் மட்டுமே தண்ணீர் விழுகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த புயல் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மழை பெய்யாததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST