குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை! - Courtallam falls Tenkasi
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தளமான குற்றால அருவிகள் அமைந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் குற்றால சீசன் தாமதமாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே அவ்வப்போது பெய்த மழையால் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அணைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வந்த நிலையில் வார விடுமுறை மட்டுமல்லாது வார நாள்களிலும் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைக்கட்டி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 23) முதல் செய்த தற்பொழுது வரை சாரல் மழை பெய்து வருவதால் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் மட்டும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதால் குளிக்க வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:TN Rains - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!