பொள்ளாச்சி கவி அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம் - சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை! - சுற்றுலாப் பயணிகள்
கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் காரணமாக, வறட்சி ஏற்பட்டு கவி அருவி மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அதிக அளவில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, கவி அருவியில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கவி அருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேபோல், தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை அதிகளவு பெய்து வந்த நிலையில் குற்றாலம் மெயில் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க காவல் துறையினர் தடை விதித்திருந்தனர். அதன் பின்னர் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரான நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:Courtallam Falls: குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!