குமரி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் மோதிய சுற்றுலா பேருந்து! - சுற்றுலா பேருந்து
கன்னியாகுமரி: கர்நாடகாவை சேர்ந்த 40 பேர் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் கன்னியாகுமரி வந்திருந்தனர். குமரியை சுற்றிபார்த்துவிட்டு அரசு மருத்துவமனை அருகே விடுதிக்கு செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக மருத்துவமனை நுழைவாயிலில் பேருந்து மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்தை அப்புறப்படுத்தினர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்