தமிழ்நாடு

tamil nadu

dindigul

ETV Bharat / videos

கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை.. எங்கு தெரியுமா? - காந்தி காய்கறி மார்க்கெட்

By

Published : Jul 28, 2023, 11:53 AM IST

தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானியர்கள் ஒரு கிலோ வாங்கும் இடத்தில் 100 கிராம், 250 கிராம் என வாங்கி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி காந்தி காய்கறி மார்க்கெட்டில் சந்தோஷ் முத்து கடையில் இன்று காலை 6 மணியிலிருந்து தக்காளி ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் கையில் பையுடன் கடையில் வந்து இரண்டு கிலோ அளவுக்கு தக்காளி வாங்க குவிந்தனர். 

தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பொழுது, பாதி விலையான 60 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு கடையின் உரிமையாளர் சந்தோஷிடமிருந்து சந்தோஷத்துடன் தக்காளிகளை வாங்கிச் சென்றனர். தக்காளி தரமானதாகவும், ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக விலை குறைக்கப்பட்டு மூன்றரை டன் வரை வியாபாரம் செய்ய இருப்பதாக வியாபாரி தெரிவித்தார். 

மேலும், தக்காளி அனைவருக்கும் சென்றடையும் வகையில் விற்பனை செய்வதாகவும், இதில் ஒரு நபருக்கு இரண்டு கிலோவுக்கு மேல் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு விற்கும் பொழுது அதே தரமான தக்காளியை 60 ரூபாய்க்கு கொடுப்பதால் கால் கிலோ, அரைக்கிலோ என வாங்க வந்த தாங்கள் மகிழ்ச்சியுடன் இரண்டு கிலோ வாங்கி செல்கின்றோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details