தமிழ்நாடு

tamil nadu

புத்தக வெளியிட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat / videos

"இந்தியா ஒரே குடும்பமாக முன்னேறி வருகிறது..." சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் பேச்சு

By

Published : Jul 30, 2023, 6:21 AM IST

சென்னை: மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "தீனதயாள் உபாத்யாயா" என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்திநராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னையை சந்திக்கின்றனர். இந்தியா தொழில் நுட்பத்தில் எவ்வளவு வளர்ந்தாலும், ராணுவத்தில் எவ்வளவு வளர்ந்தாலும், நாம் இன்னமும் சில ஆபத்துகளை எதிர்கொண்டு தான் வருகிறோம். புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் அதில் திராவிடம் எது? ஆரியம் எது? என ஆராய்கின்றனர்" என்ற கேள்வியை எழுப்பினார்.

உச்ச நீதிமன்றம் எப்போதும் மாநில மொழி விவகாரத்தில் தலையிடுவதில்லை என்றும்; அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழிகள் பேசுவது தான் உகந்தது என்று கூறிய ஆளுநர். "இந்தியாவைப் பொறுத்தவரை மொழி ஒரு தடையாக இருப்பதில்லை. இந்த அரங்கத்தில் 100 பேர் இருக்கிறீர்கள், உங்கள் எல்லோருக்கும் ஒரே வழியில் தான் உள்ளே வர அனுமதித்தார்கள். அதுபோல தான் இந்தியாவும் அனைவருக்கும் பொதுவான ஒன்று" என்று கூறினார்.

மேலும் பேசிய ஆளுநர், "புதிய கண்டுபிடிப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பது எளிய மக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும். தனித்தனியாக இருந்து சாதிக்க முடியாது. ஒற்றுமையில் தான் இந்தியாவின் வலிமை உள்ளது. ஆனால், இந்தியா தனித்தனியாக பிளவு பட்டு கிடக்கிறது" என்று பேசினார்.

மேலும் இந்தியா ஒரு புண்ணிய பூமி என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம் சகோதர, சகோதரிகள் என்று கூறினார். மேலும் "உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே, இந்தியா ஒரு குடும்பமாக முன்னேறி வருகிறது" என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details