தமிழ்நாடு

tamil nadu

மண்பாண்டம் செய்யும் தொழிலாளராக மாறிய தமிழ்நாடு ஆளுநர்

ETV Bharat / videos

திருவண்ணாமலையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளராக மாறிய தமிழ்நாடு ஆளுநர்! - bjp

By

Published : Aug 11, 2023, 12:54 PM IST

திருவண்ணாமலை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருவண்ணாமலைக்கு நேற்று (ஆகஸ்ட் 10) வந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர், கிரிவலப் பாதையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். 

இதனையடுத்து, இன்று (ஆகஸ்ட் 11) காலை புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேலும், அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர். பின்பு, சிறிது தூரம் கிரிவலம் மேற்கொண்டு தனியார் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார். 

மேலும், தனியார் நட்சத்திர ஹோட்டலைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்த மண்பாண்ட கடைகளில், மண்பாண்டம் எவ்வாறு செய்வது எனக் கேட்டு பின்னர், தொழிலாளர்களிடம் கேட்டு ஆளுநர் மண்பாண்டம் செய்தார். மேலும், இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக கருதப்படுகிறது. பின்பு மாலையில் சென்னை புறப்பட்டுச் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ABOUT THE AUTHOR

...view details