திருவண்ணாமலை ஸ்ரீ ராஜலட்சுமி ஸ்ரீ மகாலட்சுமி தாயார் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம்!
Published : Oct 28, 2023, 12:51 PM IST
திருவண்ணாமலை:செய்யாறு அருகே முக்கூரில் ஸ்ரீ கனகவல்லி, ஸ்ரீ ராஜலட்சுமி, ஸ்ரீ மகாலட்சுமி தாயார் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் விழா இன்று (அக்.28) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே முக்கூரில் ஸ்ரீ கனகவல்லி, ஸ்ரீ ராஜ்யலட்சுமி, ஸ்ரீ மகாலட்சுமி தாயார் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ப்ரதிஷ்டா சங்கல்பம், யாத்திரை பிரவேசம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் திங்கள்கிழமை த்வார பூஜா, ரக்ஷா பந்தனம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும், செவ்வாய்கிழமை வாஸ்து ஹோமமும், புதன்கிழமை சதுஸ்தார்சனம் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை காலை 8 மணி முதல் ஹோமம் பூர்ணாஷூதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனையடுத்து, கும்ப கலசங்கள் புறப்பட்டு, தாயார் சந்நிதி மற்றும் விமான கும்ப கலசங்களுக்கு பட்டாச்சாரியர்கள் வேத மந்திரம் ஓதி மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.