Tiruvannamalai BharataNatyam: 407 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை! - சைவத் திருமுறைகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று (ஜூலை 16) மாலை தஞ்சாவூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 407 பெண் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இதில் அவர்கள் சைவ சமய குரவர்கள் நால்வரின் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) சைவ திருமுறைகளின் கருத்தாக்கத்தை சுமார் 15 நிமிடங்கள் பரதநாட்டிய அசைவின் மூலம் வெளிப்படுத்தினர்.
சைவ திருமுறைகளை நாட்டிய அசைவுகளின் மூலம் வெளிப்படுத்துவதே இந்த உலக சாதனை நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். கடந்த பிப்ரவரி மாதம் 327 நாட்டிய மாணவிகள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதனை முறியடிக்கும் வகையில் நேற்று 407 நாட்டிய மாணவிகள் பங்கு பெற்ற உலக சாதனை நிகழ்வு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்றது.
மேலும், செம்மொழி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரதநாட்டிய கலைஞர்களுக்கு உலக சாதனை புரிந்த சான்றிதழையும், பதக்கத்தையும் கேடயத்தையும் வழங்கி கவுரவித்தார்கள்.