சுட்டெரிக்கும் வெயிலில் பணிபுரியும் போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ் வழங்கிய எஸ்.பி! - Tiruvannamalai traffic police
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாகக் கடந்த 2 தினங்களாக 102 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்து வருகிறது.
காவல்துறையினர் முன்கள பணியாளர்கள் பகல், இரவு பாராமல் கடும் வெயில் மற்றும் மழையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து போக்குவரத்து காவல் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மரு.கார்த்திகேயன் நேற்று காந்தி சிலை அருகே 52 போக்குவரத்து காவல் துறையினர்களுக்கு நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார்.
இனி கோடைக்காலம் முடியும் வரை தினமும் காலை இரு வேளை, மாலை இரு வேலை என்று போக்குவரத்து காவல் துறையினர்களுக்கு நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் மரு.கார்த்திகேயன் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகரத் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.