மலை கிராம மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து பாடம் கற்பித்த ஆட்சியர்!
மலை கிராம மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து பாடம் கற்பித்த திருப்பத்தூர் ஆட்சியர் - Mandharagutta
திருப்பத்தூர்:ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பீமக்குளம் ஊராட்சி மந்தாரகுட்டை கிராமத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் சொல்லிக்கொடுத்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை கண்டு கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST