தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

ETV Bharat / videos

Tiupathur: பணியாளர்களுடன் சேர்ந்து மண் அள்ளிய கலெக்டர் - வைரலாகும் வீடியோ! - tirupathur district news

By

Published : Jul 19, 2023, 7:13 PM IST

திருப்பத்தூர்:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 1400 பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பூமி பூஜை போட்டு சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டாரப்பகுதிகளான மல்லகுண்டா, கத்தேரி, நேதாஜி நகர் ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக் குட்டைகளை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நேதாஜி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பண்ணைக் குட்டையில் இருந்து மண்ணை அள்ளினார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Tenkasi: கடையம் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக கசிந்த தண்ணீர்!

ABOUT THE AUTHOR

...view details