திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா 2-ம் நாள் கொண்டாட்டம் - Subramania Swamy Temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 2ஆம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST