Viral Video: காட்டுயானை கூட்டத்தைப் பின்தொடர்ந்த புலி! - கேரளா பெரியாறு புலிகள் காப்பகம்
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா பெரியாறு புலிகள் காப்பகம் பகுதிகளில் மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டு யானைகள், காட்டுமாடு மற்றும் அபூர்வ இன பறவைகள், தாவரங்கள் உள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் புலிகள் காப்பகம் பகுதிகளில் வனத்தில் உள்ள விலங்குகளைப் பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆனைமலை காப்பகம் அருகில் உள்ள கேரள வனப்பகுதியில் ஒற்றை வரி புலி ஒன்று காட்டுயானைக் கூட்டத்தை பின் தொடரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காடு அதிர நடக்கும் காட்டு யானைக் கூட்டத்தை பதுங்கி பதுங்கி பின்தொடரும் புலி பாய்ந்து விடுமோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.