மகளிருக்கு மாதம் ரூ.1,000 திட்டம்.. திருநெல்வேலி பெண்களின் மனநிலை என்ன.? - மகளிருக்கு மாதம் 1000
திருநெல்வேலி: திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின் திமுக வெற்றி பெற்று 2 ஆண்டுகள் கடந்தும் மாதம் ரூ. 1,000 திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. ஆனால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில், 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான உரிமைத் தொகை அறிவிப்பு வெளியானது. அதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட உள்ளது. அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மாதம் ரூ. 1,000 திட்டம் குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதை காணுங்கள்.