தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர்

ETV Bharat / videos

Perambalur GH: பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களை தாக்கிய மூவர் கைது! - பெரம்பலூர் செய்திகள்

By

Published : May 3, 2023, 7:59 AM IST

பெரம்பலூர்:செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (22), இவரது நண்பர் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரஞ்சித்தின் தம்பி ராம்கி (20), தாயார் ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாயார் கனகா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் காவலாளி சின்ராஜ் (53), காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் எதையும் கேட்காமல் உள்ளே சென்றுள்ளனர். 

இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகியோர் சின்ராஜை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மற்ற தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையும் தாக்கினர். இச்சம்பவத்தில் தொடர்புடையை மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையுல் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details