செய்யாறு போக்குவரத்து சார்பில் மூன்று புதிய வழித்தடம் தொடக்கம் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு போக்குவரத்து சார்பில் மூன்று புதிய வழித்தடம் தொடங்கப்பட்டது. செய்யாறு பணிமனையில் இருந்து பஸ் எண்: 201, என்ற பஸ் செய்யாறில் இருந்து ஆற்காடு வழியாக வேலூர் வழிதடமும் மற்றும் பஸ் என்: T56/A என்ற டவுன்பஸ் செய்யாறிலிருந்து பெருங்கட்டூர் வழியாக பிரம்மதேசம், புதூர் வழி தடமும் மற்றும் செய்யாறில் இருந்து கீழ்பழைந்தை வழியாக ஆரணி வழிதடத்தை செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் ஓ. ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தொழிற்நுட்பம் துணை மேலாளர் ரகுராமன், திருவண்ணாமலை வணிக துணை மேலாளர் நடேசன், செய்யாறு கிளை மேலாளர் கணேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST