சித்ரா பௌர்ணமி: பத்மகிரி மலையில் பக்தர்கள் கிரிவலம் - பத்மகிரி மலையில் பக்தர்கள் கிரிவலம்
பௌர்ணமி என்றாலே கிரிவலம் தான். அதுவும் சித்திரையில் வரும் பௌர்ணமி சிறப்பான பௌர்ணமியாக இந்துக்கள் கருதுகின்றனர். திண்டுக்கல் பத்மகிரி மலையைச் சுற்றி மாதந்தோறும் கிரிவலம் நடைபெற்று வருகின்றது. நேற்று (ஏப். 16) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரர் உற்சவர் பல்லாக்கில் முன் செல்ல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் விளக்கேந்தி நமசிவாய வாழ்க என்ற கோஷத்துடன் கிரிவலம் சென்றனர். அபிராமி அம்மன் கோயில் தொடங்கி பெரிய கடைவீதி, காந்தி மார்க்கெட், மலையடிவாரம், ஐயப்பன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கோட்டைமுனி, ஓதசுவாமி கோயில் வழியாக அபிராமி கோயிலில் கிரிவலம் நிறைவுற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST