Video: திருப்பத்தூர் கோயில் கும்பாபிஷேகம்... குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - திருப்பத்தூர் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனரி கிராமம் புது ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பூ அலங்காரமும், கணபதி பூஜை வசு சாந்தி என சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசை மாங்கல்யம் பூஜைகளும் அதிவிமர்சையாக நடைபெற்றது. காலை முதல் மாலை வரை அன்னதானம், வாணவேடிக்கை விமரிசையாக நடைபெற்றது. காலையில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் ஏந்தி வந்து, கோபுரங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களின் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்கள் ஓம் சக்தி என்ற குரலோடு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.