ஈஸ்டர் பண்டிகை - தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் தத்துரூப நிகழ்ச்சி! - தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்
தூத்துக்குடி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்களை தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 40 நாட்களில் கடைசி நாளான இன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையாக அனுசரிக்கப் படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.