திருவண்ணாமலையில் ஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ணன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்! - Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம்கீழ்பென்னாத்தூர் அடுத்து உள்ள மேக்களூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ணன் திருக்கோயிலில் நவநீத கோபாலகிருஷ்ணன் தேர் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் ஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ணன் சாமிக்கு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நிகழ்ச்சியான 7வது நாளான நேற்று நவநீத கோபாலகிருஷ்ணன் தேர் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இதில் மேக்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டும், தேரை வடம் பிடித்து இழுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் அசம்பாவிதங்கள் எதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.