தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலையார் கோயில் ஆனி மாத உண்டியல் காணிக்கை

ETV Bharat / videos

ரூ.2 கோடியைத் தாண்டிய அண்ணாமலையார் கோயில் ஆனி மாத உண்டியல் காணிக்கை! - உண்டியல் காணிக்கை

By

Published : Jul 26, 2023, 10:29 AM IST

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் கோயிலாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆனி மாதத்திற்க்கு உரிய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (ஜூலை 25) காலை நடைபெற்றது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கின்றனர். அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இரவு உண்டியல் என்னும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து ஆனி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 646 ரூபாய் மற்றும் 149 கிராம் தங்கமும், 1.260 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details