திருநாங்கூர் கருட சேவை உற்சவம் கோலாகலம் - மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற திருநாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் 129 ஆம் ஆண்டு கருட சேவை உதஸ்வம் நடைபெற்றது. இதில், 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒரு வராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று.
தொடர்ந்து கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர்.