கோயிலில் உடைக்க முடியாத உண்டியலை தூக்கிச் சென்ற பலே திருடன்.. வைரலாகும் சிசிடிவி! - Theft CCTV Footage
Published : Oct 19, 2023, 9:17 PM IST
திருப்பூர்:குருவாயூரப்பன் நகர், மாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியலில் உள்ள பணத்தைத் திருட வந்த திருடன், உண்டியலை உடைக்க முடியாததால், அதனை கையோடு தூக்கிச் செற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
போயம்பாளையம் அருகே குருவாயூரப்பன் நகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்குக் கடந்த திங்கட்கிழமை மர்ம நபர் ஒருவர் உண்டியலில் உள்ள பணத்தைத் திருட முயற்சித்துள்ளார். உண்டியலைத் தூக்கிப் பார்த்தும், டேபிள் மீதிருந்த தீர்த்த கரண்டியை எடுத்து உண்டியல் உள்ளே போட்டும் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்க்க முயற்சித்துள்ளான்.
தொடர்ந்து, அதனை உடைக்க முடியாததால் உண்டியலைத் தூக்கிச் சென்ற மர்மநபர் அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உண்டியலை வீசி சென்று உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.