ஆம்பூரில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றினர் - தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஆகிய சங்கங்களை சேர்ந்த கொடி
நாடு முழுவதும் 75 ஆண்டுகள் கடந்து 76ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவைக்கொண்டாடி வருகிறோம். இந்த வேளையில் பிரதமர் மோடி, மக்கள் தங்களின் வீடுகள்தோறும் 3 நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காமராஜ் சாலைப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சிக்கொடி கம்பத்தில் தேசியக்கொடியை அக்கட்சியினர் ஏற்றி உள்ளனர். அதேபோல் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை அக்கட்சியினர் ஏற்றி உள்ளனர். இது மட்டும் இல்லாமல் தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஆகிய சங்கங்களைச்சேர்ந்த கொடிக்கம்பங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
ஆம்பூர் பகுதியில் பரபரப்பு