‘பிச்சைகாரன் 2’ படம் பார்க்க ரூ. 2 ஆயிரம் நோட்டுடன் சென்ற நண்பர்கள் - வாக்குவாதத்தில் திரையரங்கு ஊழியர்கள்! - ரூ 2 ஆயிரம் நோட்டு விவகாரம்
சென்னை போரூரைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைகாரன் 2 திரைப்படத்தைக் காண மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கிற்குச் சென்றுள்ளார். திரையரங்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து 3 டிக்கெட்கள் எடுக்கமுயன்றபோது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்காமல் அருகே வைத்து இருந்த பதாகையை சுட்டிகாட்டியுள்ளனர்.
அதில், ரிசர்வ் வங்கி விரைவில் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதால், 2ஆயிரம் நோட்டுகள் இங்கு வாங்கப்படாது என்றும், வங்கிகளிலே உங்களது 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க சிறந்த இடம் என்றும் உங்களது ஒத்தொழைப்புக்கு நன்றி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
அதனைப் பார்த்த அவர்கள் தங்களிடம் வேறு நோட்டுகள் இல்லை எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தற்போது அனைத்து இடங்களிலும் வாங்குவதாக செய்திகள் வெளியாகுவதாகவும் ஏன் திரையரங்கில் வாங்க மறுப்பதாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர் இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மதுரவாயல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வங்கிகளில் மாற்றம்... மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடும் வங்கிகள்!