‘ஓபிஎஸ் போடி தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருகிறார்’ - தங்க தமிழ்ச்செல்வன் கண்டனம் - ops
தேனி:போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று (மே 24) தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (மே 28) போடிநாயக்கனூரில் 100 கோடி ரூபாய் செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு கொட்டக்குடி கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் போடிநாயக்கனூருக்கு வருவகிறார்கள்.
அவர்களின் வருகையின் போது குறிப்பாக கூட்டு குடிநீர் திட்டத்தின் பயன்பாடு குறித்தும் மேலும் அவர்களின் வருகையின் முன்னேற்ப்பாடு குறித்தும் போடி நகராட்சியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளோம்” எனக் கூறினார். பின்னர் திட்டத்தை தொடங்கி வைக்க போடி சட்டப்பேரவை உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படும். வருவதும் வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்” என்றுக் கூறினார்.
முன்னதாகப் பேசிய அவர், “போடி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு இதுவரை அவர் எத்தனை முறை போடிநாயக்கனூருக்கு வந்துள்ளார், தோற்றுப்போன நான் தான் அடிக்கடி போடிநாயக்கனூருக்கு வருகை தந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறேன்” என பன்னீர்செல்வத்தைக் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை, எம்எல்ஏவாக ஆன ஓ பன்னீர்செல்வம் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது” என பாசாங்கு செய்தார்.
போடிநாயக்கனூர் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தங்கத் தமிழ் செல்வன், “தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் உலகம் முழுவதுமே இதுபோன்றுதான் நடைபெற்று வருகின்றது” என்று பொதுவர்த்தமாக கூறிச் சென்றார்.
இதையும் படிங்க:'நிம்மதியாக இருக்க முடியாது' - எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்