தமிழ்நாடு

tamil nadu

தேனி: அல்லிநகரம் பகுதியில் வீதி உலா வந்த 6 அடி உயர நந்தி சிலை

By

Published : Jul 15, 2023, 5:08 PM IST

தேனி: அல்லிநகரம் பகுதியில் வீதி உலா வந்த 6 அடி உயர நந்தி சிலை

தேனி:மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சுயம்பு வீரப்ப அய்யனார் கோயில் 6 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அருள்மிகு சுயம்பு வீரப்ப அய்யனார் கோயில். இந்த கோயில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கோயிலில் சுயம்பு லிங்கமானது எழுந்தருளி இருக்கிறது.

இந்நிலையில் லிங்கத்துக்கு முன் நந்தியின் சிலை நிறுவப்பட முடிவு செய்யப்பட்டது. இந்த நோக்கில் 6 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட நந்தி சிலையானது தயார் செய்யப்பட்டு தேனியின் முக்கிய வீதிகள் வழியாக மக்கள் சிலையை வீதி உலாவாக எடுத்து வந்து வீரப்ப அய்யனார் கோயிலை அடைந்தார்.

பின்னர் ஆலய வளாக எதிரில் இருந்த பீடத்தில் நந்தி சிலையை கிரேன் மூலம் தூக்கி அமர்த்தினார். அப்போது ஏராளமான மக்கள் மலர் தூவி நந்திவர்மனை வரவேற்றனர். பின் வண்ண மலர்களால் அலங்கரித்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் செய்தனர்.

இதில் தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நந்திவர்மனை வழிபட்டு சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details