‘பின்னோக்கி ஸ்கேட்டிங்’: உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சாதனை முயற்சி! - ஸ்கேட்டர்ஸ்
தூத்துக்குடி: சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணி நேரம் தொடர்ந்து பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை செய்யும் முயற்சி நேற்று காலை 6 மணி அளவில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் துவங்கப்பட்டது.
இந்த சாதனை முயற்சி இன்று காலை 6 மணி அளவில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனை முயற்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் துவக்கி வைத்தார்.
உலகிலேயே முதல் முறையாக 24 மணி நேரம் தொடர்ந்து பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 21 ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். மாணவ, மாணவிகளின் இந்த சாதனையைப் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டி ஆதரவு அளித்து உற்சாகப்படுத்தி வந்தனர்.