ஒருமையில் பேசியதாகக் கூறி ஆம்பூர் சார்பதிவாளரை கண்டித்து நிலத்தரகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - thirupattur news
திருப்பத்தூர்:ஆம்பூரில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை ஒருமையில் பேசி பத்திரப் பதிவு செய்ய காலம் தாழ்த்தி வருவதாகவும், தமிழ்நாடு அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் கூறி ஆம்பூர் சார்பதிவாளரைக் கண்டித்து சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் கோஷங்கள் இட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூர் நகர் பகுதியில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரமேஷ் குமார் என்பவர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரமேஷ் குமார் என்ற அலுவலர், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்களை ஒருமையில் பேசி வருவதாகவும், முறையான பத்திரங்களைப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தமிழக அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படும் நிலை இருப்பதாகக் குற்றஞ்சாட்டி ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆம்பூர் சார்பதிவாளருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி, தமிழ்நாடு நிலத்தரகர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் கேட்டதால் தகராறு - இரண்டு பேருக்கு சிறை