தமிழ்நாட்டு கலாசாரம் மீது விருப்பம்... பாரம்பரிய முறையில் மீண்டும் திருமணம் முடித்த ஸ்பெயின் தம்பதி! - திருமணம்
திருப்பத்தூர்:தமிழ்நாட்டு கலசாரம் மீது கொண்ட மோகத்தால் ஸ்பெயின் தம்பதி, தமிழ்நாட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி கிராமத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தான் இந்த திருமணம் நடைபெற்றது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பிடித்து போய் பாரம்பரிய முறையில் வேட்டி சேலை அணிந்து மாலை மாற்றி காதலை வெளிப்படுத்தும் விதமாக மோதிரம் அணிந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் ஸ்டோனேஜ் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மூலம் ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு நான்கு ஆண்கள் உட்பட 15 நபர்கள் சுற்றுலா மேற்கொண்டனர். அப்போது தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பார்த்து வியப்படைந்து ஏற்கனவே தம்பதிகளாக இருந்த இருவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி கிராம கோயிலில் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய படி சேலை அணிந்து, தலை நிறைய பூக்கள் சூடியும் ஆண்கள் வெட்டி சட்டை அணிந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.