வாசுதேவநல்லூர் தனியார் கல்லூரில் உற்சாகமாக நடைபெற்ற சுதந்திர தின விழா - பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கினர்
தென்காசி: கடையநல்லூரை அடுத்துள்ள வாசுதேவநல்லூர் வியாசா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கருணாகரன் ஐஏஎஸ் கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், 'கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்றால் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும்’ எனப் பேசினார். இதனைத்தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் பேசுகையில், ’கல்வியால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியும். நாட்டில் விடுதலைக்கு பாடுபட்ட பூலித்தேவரையும் கர்மவீரர் காமராஜரையும் பாரதியாரையும்,வீரமங்கை வேலுநாச்சியாரையும் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் உளமார நேசிக்க வேண்டும்’ என அவர் பேசினார். விளையாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு கருணாகரன் ஐஏஎஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST