தமிழ்நாடு

tamil nadu

ஆலங்கட்டி மழை (hailstorm)

By

Published : May 29, 2023, 10:50 PM IST

ETV Bharat / videos

Hailstorm: 'ஐ..ஆலங்கட்டி மழை பெயுது..அதிசயம்..' ஆச்சரியத்தில் சிறார்கள்!

கோயம்புத்தூர்:வெப்ப சலனம் (heat waves) காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டி வரும் நிலையில் மதியத்திற்கு மேல் மழை பெய்கிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அவிநாசி சாலை, ரயில் நிலையம், பூ மார்க்கெட், உக்கடம், இடையர் பாளையம் ஆகிய மாநகர பகுதிகளிலும் கணுவாய், தடாகம் சோமையம்பாளையம் ஆகிய புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இடையர்பாளையம், கோவில்மேடு மற்றும் டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை (hailstorm) பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமடைந்தனர். காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் மதியத்திற்கு மேல் பெய்த ஆலங்கட்டி மழையின் (hailstorm) காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அதேசமயம் மழை வரும்போது எல்லாம் கோவை மாவட்டத்தில் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதாலும் சாலைகள் குண்டும் குழியுமாய் காணப்படுவதாலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details