"எப்பா.. என்னா வெயிலு" கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - today erode news
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி பவானிசாகர் அணையிலிருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் நீர் அருவி போல கொட்டுகிறது. மேலும், கொடிவேரி அணைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், தொடர் விடுறையை ஒட்டி கோடை வெயிலை சமாளிக்க கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் வெளி மாநிலங்கள் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். மேலும் பரிசல் பயணம் மேற்கொண்டு பூங்காவில் அமர்ந்து தங்கள் கொண்டு வந்த உணவுகளை உண்டும், கடைகளில் விற்கப்படும் பொரித்த மீன்களின் வாங்கி உண்டும் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்துனர். தற்போது சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதால், பங்களாபுதுர் மற்றும் கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.