Video:காத்திருந்த வனத்துறையினர்... கூண்டில் சிக்கிய சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது! - நடமாடும் பாதையில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை அப்பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் கேமரா வைத்து கண்காணித்தனர். சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தபிறகு அதன் நடமாடும் பாதையில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. அப்பகுதிக்கு வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி காராச்சிக்கொரையில் உள்ள வன கால்நடை மையத்திற்கு கொண்டுசென்றனர். வாகனத்தின் மீது இருந்த கூண்டின் கதவைத்திறந்ததும் சிறுத்தை தாவி குதித்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST