தமிழ்நாடு

tamil nadu

விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுபடகில் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

By

Published : Jun 4, 2023, 9:47 PM IST

ETV Bharat / videos

தூத்துக்குடியில் டிமாண்டான நாட்டுப்படகு மீன்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

தூத்துக்குடி: விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப் படகில் பிடிக்கப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இதனால், தூத்துக்குடியில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக தமிழ்நாட்டில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். 

இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் கேரள கடற்பகுதியிலும் விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. ஆனால், நாட்டுப் படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் பொருந்தாத நிலையில், நாட்டுப் படகில் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர். 

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால், தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், அங்கு மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும், தமிழ்நாடு மற்றும் கேரள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது.

இதையும் படிங்க: மெரினாவில் காதல் ஜோடியிடம் அத்துமீறல்..ரவுடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் காவலர் கலா!

சீலாமீன் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், விளை மீன் கிலோ ரூ.500 வரையிலும், ஊலி கிலோ ரூ.600 வரையிலும், பாறை கிலோ 500 ரூபாய் வரையிலும், சாலை மீன் ஒரு கூடை ரூ.3,000 வரையிலும் ஒரு கிலோ ரூ.500 ரூபாய் வரையிலும் நண்டு கிலோ ரூ.250 வரையிலும் விற்பனையானது. 

மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க:Suez Canal : சுயஸ் கால்வாயில் பழுதான சரக்கு கப்பல்.. கப்பல் போக்குவரத்து பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details