பாத்திரத்திற்குள் சிக்கிய குழந்தை- சாதுரியமாக மீட்ட தீயணைப்பு துறை - child trapped
Published : Dec 30, 2023, 1:22 PM IST
திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூபதி. இவருக்கு திருமணம் ஆகி புத்தி பிரியா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை, வீட்டில் இருந்த சில்வர் தண்ணீர் பாத்திரத்திற்குள் இறங்கியுள்ளது.
அப்பொழுது, எதிர்பாராத விதமாக குழந்தை பாத்திரத்தில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் கதறி அழுத நிலையில், குழந்தையின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தை சில்வர் பாத்திரத்திற்குள் மாட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதையடுத்து, குழந்தையை மீட்கப் போராடி முடியாத நிலையில், இதுகுறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பாத்திரத்தில் மாட்டி இருந்த குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் குழந்தை எவ்வளவு முயற்சி செய்தும் வெளிவராததால், பின்னர் எந்திரத்தைக் கொண்டு பாத்திரத்தை இரண்டாகப் பிளந்து, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.