அரசு பள்ளி சமையலறையை உடைத்து பொருட்களை சாப்பிட்ட யானைகள்.. கூடலூர் மக்கள் அச்சம்! - elephant
நீலகிரி:கூடலூர் அருகே அரசுப் பள்ளியின் சமையல் கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள் சமையல் பொருட்கள் மற்றும் அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. கூடலூர் அருகே பத்து காட்டு யானைகள் ஆங்காங்கே சுற்றித் திரிவதால் உள்ளூர் வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தட்டாம் பாறை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக 10 காட்டு யானைகள் சுற்றித் திரிகிறது. இதே பகுதியில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. அங்குள்ள சமையல் அறையை உடைத்து அரிசி மற்றும் பொருள்களை யானைகள் சேதப்படுத்திச் சென்றுள்ளன.
மேலும், கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் கூடலூர் பகுதியில் அண்மைக் காலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் சாதாரணமாக உலா வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!