Video - தெரு நாய்களின் பாதுகாப்பு வளையத்தில் ஹாயாக தூங்கிய போதை ஆசாமி! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்:வேடசந்தூர் அருகே ஆத்துமேட்டில் நேற்று இரவு (ஜூலை 13) மது போதை ஆசாமி ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அம்பேத்கர் சிலை அருகே வந்தபோது போதை தலைக்கு ஏறியதால், அந்த மது போதை ஆசாமி சைக்கிளை நிறுத்திவிட்டு, தரையில் ஹாயாக படுத்து மட்டையானார்.
அப்போது அவரைச் சுற்றி 10 தெரு நாய்கள் படுத்திருந்தது. இதைப் பார்த்தபோது மதுபோதை ஆசாமிக்கு தெரு நாய்கள் பாதுகாப்பு கொடுப்பதுபோல் இருந்தது. மேலும் அவர் போதை தெளிந்து எழுந்து செல்லும் வரை நாய்களும் எங்கேயும் செல்லாமல் அங்கேயே படுத்திருந்தன.
தெரு நாய்களின் பாதுகாப்பு வளையத்தில் மது போதை ஆசாமி ஹாயாக தூங்கிய காட்சி அந்த வழியே சென்றவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
தற்போது போதை ஆசாமி ஹாயாக தூங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 'மட்டையான மதுப்பிரியர்களுக்கு கம்பெனி கொடுத்து உறங்கிய நாய்கள்' என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க :'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் தா': தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்!