ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - Panchayat Council President Vetrivel
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிவேல் செல்வம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக தும்பேரி கூட்டு சாலையிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் போடும்போது பணியில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் குருபிரசாத் என்பவருக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், பெட்ரோல் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற ஊராட்சி மன்ற தலைவரை அந்த இளைஞர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் அந்த இளைஞரை அடிக்க பாய்ந்துள்ளர். பதிலுக்கு அந்த இளைஞர் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட அம்பலூர் காவல் துறையினர், இரு தரப்பினர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெட்ரோல் பங்க் ஊழியர் குருபிரசாத்தை தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் அதிருப்தி!