தமிழ்நாடு

tamil nadu

திருட்டு பக்தனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு! சாமி கும்பிடுவது போல் நடித்து நகை மற்றும் பணம் திருட்டு..

ETV Bharat / videos

சாமி கும்பிடுவது போல் நடித்து நகை, பணம் கொள்ளை... சிசிடிவில் சிக்கிய திருட்டு பக்தன்! - நத்தம் காவல் துறை

By

Published : May 27, 2023, 4:44 PM IST

திண்டுக்கல்லில்சாமி கும்பிடுவது போல் நடித்து கோயிலில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிய திருட்டு பக்தனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ளது காளியம்மன் கோயில். இந்த கோயிலில் இன்று (மே 27) அதிகாலை 4.45 மணிக்கு வழக்கம் போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கோயிலுக்கு பக்தர்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். 

அப்போது, கோயிலில் சிசிடிவி பொறுத்தப்பட்டு இருப்பதை கவனிக்காத மர்ம நபர் ஒருவர், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து யாரும் இருக்கின்றனரா என நோட்டமிட்டு உள்ளார். பின்னர் யாரும் தன்னை கவனிக்காததை அறிந்து, கோயிலின் கருவறைக்குள் சென்று அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி பாக்கெட்டில் வைத்துள்ளார்.

பின்னர், எவருக்கும் சந்தேகம் வராத வண்ணம் பக்தியுடன் அம்மனை வழிபட்டு கோவிலை விட்டு செல்வது போல் வெளியேறியுள்ளார். இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஈபிஎஸ் எம்.எல்.ஏ. பதவி பறிக்கபடுமா? சொத்து விவரத்தில் தவறான தகவல் வழக்கில் அறிக்கை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details