ஆம்பூர் அருகே 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேரோட்டத்திருவிழா - உற்சாகத்தில் மக்கள் - aambur
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் உடனுறை அருள்மிகு சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய திருத்தேருடன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை, கொண்ட தேரை ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜியன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST