தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Accident CCTV : சீறிப்பாய்ந்த கார்... ஆட்டோ ஓட்டுநர் பரிதாப பலி.. - auto driver

🎬 Watch Now: Feature Video

நெல்லை அருகே பரிதாபம்

By

Published : May 17, 2023, 7:14 PM IST

திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி வரை செல்லும் சாலையின் விரிவாக்க பணி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமை அடையாமல் ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வருவதால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது. 

எனவே சாலை பணியை விரைந்து முடிக்கும்படி அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தலைமையில் போராட்டம் கூட நடைபெற்றது. ஆனாலும் தற்போது வரை சாலை பணி முடியாத நிலையில் அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர் பகுதியில் இந்த பைபாஸ் சாலை அருகே ஆட்டோ ஓட்டுனர் ராஜா தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு துடைத்துக் கொண்டிருந்தார். 

அப்போது திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ஓட்டுனர் ராஜா மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் ராஜாவை இடித்து விட்டு அருகில் சாலை ஓரம் நின்ற மரம் மீது மோதி நின்றது. 

தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் ராஜா உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

அதில் அந்த ஆட்டோ மீது அதி வேகத்தில் கார் மோதும் காட்சிகள் காண்போரை பதபதைக்கச் செய்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க:புழல் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details