தமிழ்நாடு

tamil nadu

ஆக்ரோஷமாக கதவை உடைத்து வரும் காட்டெருமை

ETV Bharat / videos

யாரென்று தெரிகிறதா!... ஆக்ரோஷமாக கதவை உடைத்து வரும் காட்டெருமை! - கொடைக்கானல் மலைப்பகுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 3:18 PM IST

திண்டுக்கல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வன விலங்கான காட்டெருமை பன்றி உள்ளிட்ட விலங்குகள் நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் அதிக அளவில் உலா வருகிறது.  

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்பு அடைவதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகர் பகுதிகளில் அடிக்கடி காட்டெருமைகள் உலா வருவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) தனியார் தங்கும் விடுதி கதவை காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமாக தாண்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

எனவே நகர் பகுதிகளில் புகும் காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். 

இதையும் படிங்க: "வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details