'என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை'... பாடலைக் கேட்டு மனமுருகி தலையாட்டிய யானை! - அபிநயா யானை
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைப் புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் சின்ன தம்பி, முத்து உட்பட 26 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு முகாமில் வனவர் சோழ மன்னன் என்பவர் சினிமா பாடல்கள் பாடி, அங்குள்ள யானைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதையடுத்து வளர்ப்பு யானை அபிநயாவைப் பார்த்து, ”என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை” என வர்ணித்து பாட, அபிநயா யானை மெய் மறந்து நின்றது. ”யானைகளால் தான் வனப்பகுதி செழிப்பாக உள்ளது” என வரிகளுடன் பாடலின் கடைசி வரிகள் ”உன்னை காக்க வனத்துறை இருக்கிறது” எனப் பாடி பாட்டை முடிந்தார்.
பாகனின் மிரட்டலான வார்த்தைகள் கேட்டு பழக்கப்பட்ட யானைகள் வனவர் சோழ மன்னன் இனிமையான பாடல்களைக் கேட்டு தலையாட்டி உற்சாகம் அடைந்தன.
இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனம்!
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் இழப்பீடு: செங்கற்சூளைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து!