இயற்கை உரத்தை கூவி கூவி விற்பனை செய்த தஞ்சை மேயர்! - தஞ்சாவூர் மேயர் ராமநாதன்
தஞ்சாவூர்மாநகராட்சியில் சுத்தமான பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் விதமாக மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 14 கோட்டங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதைப்போல் தஞ்சாவூர் யாகப்பா நகர் பூங்கா தெருவில் உள்ள பூங்காவில் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பில் மாநகரத்தின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பணியை மேயர் ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பூங்காவில் உள்ள குப்பைகளை தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து மேயர், ஆணையர் மற்றும் துணைமேயர் ஆகியோர் அகற்றினர். பின்னர், மாநகராட்சி பணியாளர்களால் தயாரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த இயற்கை உரத்தை மேயரும் ஆணையரும் 10க்கு ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்தனர்.பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு களைப்பை போக்கும் வகையில் அவர்களுக்கு தர்பூசணி, நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் நீலகண்டன் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:Tirumala Tirupati: திருப்பதி போறீங்களா..? அப்போ இதை கண்டிப்பா படிங்க!