தஞ்சை பெரிய கோயிலில் 3ஆம் நாள் பிரகன் நாட்டியாஞ்சலி!
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், பிரகன் நாட்டியாஞ்சலி பவுன்டேசன் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடப்பது வழக்கம். அந்த வகையில் 20வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள், மகாசிவராத்திரி (பிப்.18) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வு வருகிற 24ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் 51 குழுக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு, தினமும் பெரிய கோயிலில் உள்ள நந்தி மண்டபத்தில் இசை நாட்டிய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நிகழ்வின் 3ஆம் நாளான நேற்று (பிப்.20) ஹைதராபாத், டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த பரதநாட்டிய இசைக் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதக், மோகினியாட்டம், குச்சிப்புடி மற்றும் ஒடிசி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.