கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் - தண்டு மாரியம்மன் கோயில்
கோவை: அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஏப்ரல் 26) பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை கோனியம்மன் கோயிலில் துவங்கிய இந்த ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, அவிநாசி சாலை வழியாக தண்டுமாரியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. நேர்த்திக்கடன் செலுத்தி வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் நீர் மோர், கூழ் ஆகியவற்றைப் பொதுமக்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதையும் படிங்க: திருச்சி சமயபுரம் கோயிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்