Thaipusam: குழந்தை வரம் தந்த ரத்தினகிரி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் - murugan festival celebration in Rathinagiri
வேலூர்: உலகெங்கிலும் இருக்கும் முருகன் கோயில்களில் இன்று (ஜன.05) தைப்பூசம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகுசிறப்பாக நடைபெற்றது.
ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் குழந்தைக் கடவுளாக வீற்றிருப்பதால், இங்கு பெண்கள் குழந்தை வரம் கேட்டால் உடனடியாக நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் குழந்தைகளுடன் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.